வணிகம்

ரூ.5,000 கோடி திரட்டிய பரோடா வங்கி

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்டியுள்ளது.

Din

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீண்டகால உள்கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகள் பருவகாலம் கொண்ட அந்தப் பத்திரங்களுக்கு 7.30 சதவீத ஈவுத் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் ரூ.2,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், ரூ.15,000 கோடிக்கும் மேல் கடன் பத்திரங்களைக் கோரி 146 விண்ணப்பங்கள் குவிந்தன. அதையடுத்து ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT