கோப்புப் படம் 
வணிகம்

5வது நாளாக உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்! ஐடி பங்குகள் உயர்வு!

வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 809 புள்ளிகளும் நிஃப்டி 240 புள்ளிகளும் உயர்வுடன் இருந்தன.

DIN

வாரத்தின் 4வது நாளான இன்று (டிச. 5) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்தது. இதன்மூலம் தொடர்ந்து 5வது நாளாக சென்செக்ஸ் உயர்வுடன் முடிந்துள்ளது.

வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 809 புள்ளிகளும் நிஃப்டி 240 புள்ளிகளும் உயர்வுடன் இருந்தன. மும்பை பங்குச் சந்தையில் ரூ. 459.16 கோடிக்கு வணிகம் நடைபெற்றது. அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 1.95% உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 809.53 புள்ளிகள் உயர்ந்து 81,765.86 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 240.95 புள்ளிகள் உயர்ந்து 24,708.40 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.98 சதவீதம் உயர்வாகும்.

27 நிறுவனப் பங்குகள் உயர்வு

வணிக நேரத் தொடக்கத்தில் உயர்வுடன் (81,182.74 புள்ளிகளுடன்) தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 82,317.74 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும் 80,467.37 என்ற அதிகபட்ச சரிவையும் இன்று சந்தித்தது. வணிக நேர முடிவில் 809 புள்ளிகள் உயர்ந்து 81,765 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிந்திருந்தன. எஞ்சிய 27 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 2.52% உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் 2.42%, டைட்டன் கம்பெனி 2.28%, பார்தி ஏர்டெல் 1.98%, பஜாஜ் ஃபைனான்ஸ் 1.64%, ஐசிஐசிஐ வங்கி 1.56%, டெக் மஹிந்திரா 1.56%, அல்ட்ராடெக் சிமென்ட் 1.42%, எச்.சி.எல். டெக் 1.39% உயர்ந்திருந்தன.

இதேபோன்று என்டிபிசி -0.97%, ஏசியன் பெயின்ட்ஸ் -0.30%, இந்தஸ் இந்த் வங்கி -0.07% சரிவுடன் காணப்பட்டன.

நிஃப்டி நிலவரம்

இதேபோன்று நிஃப்டி 24,539.15 புள்ளிகளுடன் தொடங்கியது. பின்னர் படிப்படியாக சரிந்து, அதிகபட்சமாக 24,295.55 புள்ளிகள் வரை சென்றது. பிற்பாதியில் உயரத் தொடங்கிய நிஃப்டி அதிகபட்சமாக 24,857.75 புள்ளிகள் வரை உயர்ந்தது.

வணிக நேர முடிவில் 240 புள்ளிகள் உயர்ந்து 24,708 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் பிஎஸ்இ 13.60%, மஹாராஷ்டிரா சீம் 11.40%, திரிவேனி என்ஜினியரிங் 9.61%, சி.டி.எஸ்.எல். 8.00%, கல்பட்ரு பவர் 7.11% உயர்ந்திருந்தன.

இதேபோன்று அதிகபட்சமாக கிராஃபைட் இந்தியா, வோடாஃபோன் ஐடியா, சோழா ஃபின் ஹோல்டிங்ஸ், ஆம்பர் என்டர்பிரைசஸ், ஆயில் இந்தியா, ஸ்ரீ சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.

பங்குகளை வாங்க ஆர்வம்

புதன்கிழமை தரவுகளின்படி, ரூ. 1797.60 கோடி மதிப்புடைய பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர். அதேசமயம் உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ. 900.62 கோடி மதிப்புடைய பங்குகளை விற்றுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை தரவுகளின்படியும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையிலான பங்குகளை வாங்கியுள்ளனர். (ரூ. 3664.67 கோடி). உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ. 250.99 பங்குகளை விற்றுள்ளனர்.

இதையும் படிக்க | டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 10% உயா்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT