FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

Updated On : 6 டிசம்பர் 2024, 10:44 am IST
RBI
பகிர்:

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.5 சதவிகிதமாகத் தொடரும் என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி(ஜிடிபி) 6.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜிடிபி முந்தைய கணிப்பு 7.2 சதவீதமாக இருந்தது.

2020 பிப்ரவரி மாதம் முதல் 11-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments