முகப்பு
வணிகம்

ஜனவரி முதல் கியா இந்தியா வாகனங்களின் விலை 2% உயர்வு!

கியா இந்தியா நிறுவனம், அதன் அனைத்து மாடல்களின் விலையை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 2 சதவிகிதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Updated On : 9 டிசம்பர், 2024 at 2:16 PM
பகிர்:

புதுதில்லி : கியா இந்தியா நிறுவனமானது, அதன் அனைத்து மாடல்களின் விலையை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 2 சதவிகிதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் இந்க விலை உயர்வானது, பொருட்களின் விலை மற்றும் அதிகரித்து வரும் விநியோகச் சங்கிலி தொடர்பான செலவுகளே காரணம் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து கியா இந்தியாவின் மூத்த துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) ஹர்தீப் சிங் பிரார் தெரிவித்ததாவது:

இதையும் படிக்க: விவசாய ஊழியர்களுக்கான சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் குறைவு!

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்தர தொழில்நுட்ப ரீதியாக உள்ள மேம்பட்ட வாகனங்களை வழங்க நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. இருப்பினும் மூலப்பொட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அத்துடன் அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் காரணமாக விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றார்.

எண்ணற்ற சாவல்கள் இருந்தபோதிலும், கியா இந்தியா ஆனது வாகனங்களின் செலவு அதிகரிப்பின் கணிசமான பகுதியை ஏற்று வருகிறதால், வாடிக்கையாளர்களுக்கு நிதி தாக்கத்தை இது குறைக்கிறது. அதே வேளையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த மாடல்களில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.

இதுவரை கியா நிறுவனமானது, 16 லட்சம் கார்களை இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →