முகப்பு
வணிகம்

நிலக்கரி இறக்குமதி 11 கோடி டன்னாக அதிகரிப்பு

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 11.12 கோடி டான்னாக அதிகரித்துள்ளது.

Updated On : 15 டிசம்பர், 2024 at 1:29 AM
பகிர்:

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 11.12 கோடி டான்னாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 11.12 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 2.2 சதவீதம் அதிகமாகும். அப்போது இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 10.8 கோடி டன்னாக இருந்தது.

மதிப்பின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ரூ.1,20,532.21 கோடிக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.