lic 
வணிகம்

2024ல் எல்.ஐ.சியின் கோரப்படாத முதிர்வு தொகை ரூ.881 கோடி!

ஆயுள் காப்பீட்டுக் கழகம் இடமிருந்து 2023-24 ஆம் ஆண்டில் ரூ.880.93 கோடி கோரப்படாத முதிர்வுத் தொகை உள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

DIN

புதுதில்லி: ஆயுள் காப்பீட்டுக் கழகம் இடம் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.880.93 கோடி கோரப்படாத முதிர்வுத் தொகை உள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

2024 நிதியாண்டில் சுமார் 3,72,282 பாலிசிதாரர்கள் முதிர்வு சலுகைகளை கோரவில்லை என்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

முந்தைய ஆண்டில் 3,73,329 பாலிசிதாரர்களுக்கு சொந்தமான ரூ .815.04 கோடி உரிமை கோரப்படாமல் இருந்தது. அதே வேளையில், உரிமை கோரப்படாத மற்றும் நிலுவையில் உள்ள உரிமைகோரல்களைக் குறைப்பதற்காக, பாலிசிதாரர்கள் தங்கள் நிலுவைத் தொகையை கோருவதற்கு ரேடியோ, அச்சு ஊடகம் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் விளம்பரம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எல்.ஐ.சி மேற்கொண்டது.

இதையும் படிக்க: பலவீனமான உலகளாவிய போக்கால் சரிந்த பங்குச் சந்தைகள்!

அதே வேளையில், நினைவூட்டல் கடிதங்கள், சாதாரண மற்றும் விரைவு தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், மொபைல் எண் மூலமாகவும் எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது உரிமைகோரல் தீர்வு செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 'நெஃப்ட்' மட்டுமே பாலிசிதாரர்களுக்கு தேவைப்படுகிறது.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த செளத்ரி, 2024 நவம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் அது 2.63 சதவிகிதம் குறைந்துள்ளது.

இருப்பினும், சதவிகித அடிப்படையில், கடந்த 20 ஆண்டுகளில் இன்று வரை இல்லாத அளவுக்கு 2008 அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது உள்ளது என்றும், இதற்கு முந்தைய வாரத்தை விட அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது 5.65 சதவிகிதம் குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்: நயினாா் நாகேந்திரன்

பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 8 போ் காயம்

கல்லல் பகுதியில் அக்.14-இல் மின்தடை

குழந்தையை கொலை செய்த தந்தை உயிரிழப்பு

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: மூவா் கைது

SCROLL FOR NEXT