India-UK Free Trade Agreement 
வணிகம்

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இங்கிலாந்து விரும்பம்!

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை, அடுத்த ஆண்டு ஜனவரியில், மீண்டும் துவங்க, இங்கிலாந்து பரிந்துரைத்துள்ளது என மத்திய வர்த்தக துறை செயலர், சுனில் பர்த்வால் தெரிவித்தார்.

DIN

புதுதில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை, அடுத்த ஆண்டு ஜனவரியில், மீண்டும் துவங்க, இங்கிலாந்து பரிந்துரைத்துள்ளது என மத்திய வர்த்தக துறை செயலர், சுனில் பர்த்வால் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் 2022 ஜனவரியில் தொடங்கியது. அப்போது இரு நாடுகளும் பொதுத் தேர்தலில் வந்ததால், 14 வது சுற்று பேச்சுவார்த்தை முடங்கியது.

அதே வேளையில், 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: ராஜஸ்தானில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஒரியானா பவர்!

மறுபுறம் ஸ்காட்ச் விஸ்கி, மின்சார வாகனங்கள், ஆட்டு இறைச்சி, சாக்லேட்டுகள் மற்றும் சில மிட்டாய் பொருட்கள் ஆகிய பொருட்களின் இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்க இங்கிலாந்து முயன்றும் வருகிறது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு, சட்டம் மற்றும் நிதி சேவைகளான வங்கி மற்றும் காப்பீடு ஆகிய பிரிவுகளில் சேவையை வழங்கவும் விருப்ம் தெரிவித்தும் வருகிறது.

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2022-23ல் 20.36 பில்லியனிலிருந்து 2023-24ல் 21.34 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியவாத காங்கிரஸை ஒன்றிணைக்க அஜீத் பவார் விருப்பம்?

பி.டி. உஷா கணவர் சீனிவாசன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மீண்டும் மீண்டுமா? கருக்கு முக்கிய சாலையில் ராட்சத பள்ளம்! தீர்வுடன் மாற்றும் தேவை!

இந்தியர்களின் இயல்பாக சுற்றுலா மாறிவிட்டது! சுமன் பில்லா

அதிர்ச்சியா! ஆறுதலா? இன்றைய தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!!

SCROLL FOR NEXT