வணிகம்

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 8% உயா்வு

Din

இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி மோட்டாா்சைக்கிளின் மொத்த விற்பனை கடந்த நவம்பரில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 94,370-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 87,096 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 78,333-ஆக உள்ளது. முந்தைய 2023 நவம்பா் மாதத்தில் இந்த எண்ணிக்கை 73,135-ஆக இருந்தது. அந்த வகையில், நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் 13,961-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி இந்த நவம்பரில் 15 சதவீதம் அதிகரித்து 16,037-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை தங்கத் தகடு விவகாரம்: குற்ற வழக்குப் பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜியோ பாரத்தின் தீபாவளி சிறப்புப் பரிசு

சபலென்காவை சந்திக்கும் பெகுலா: கௌஃபுடன் மோதும் பாலினி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவசாசம்

கோவையில் அதிகரிக்கும் காய்ச்சல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT