இந்திய ரூபாய் 
வணிகம்

ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.11-ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.11 ஆக நிலைபெற்றது.

DIN

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.11 ஆக நிலைபெற்றது.

அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலர் தேவை காரணமாக ரூபாய் இன்று பலவீனமாக இருந்தது. மேலும், நிலையற்ற அரசியல் சூழ்நிலையால் கச்சா எண்ணெய் சற்று உயர்ந்து முடிந்து அனைவரின் உணர்வுகளை சரிய செய்தது.

அதே வேளையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் 2025ல் எதிர்பார்த்ததை விட மெதுவாக வட்டி விகிதக் குறைப்பை தொடங்கும் என்பதால் டாலர் குறியீடு உயர்ந்தே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: களத்தில் காளைகள்: நிஃப்டி 165 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 499 புள்ளிகளுடன் உயர்வு!

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.02 ஆக வர்த்தகமான நிலையில், ரூ.85.13 என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது. இறுதியில் ரூ.85.11ஆக நிலைபெற்றது.

அதே வேளையில், வெள்ளிக்கிழமை அன்று வர்த்தக முடிவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.85.04-ஆக இருந்தது.

இது குறித்து அனுஜ் செளவுத்ரி தெரிவித்ததாவது:

மிரே அசெட் ஷேர்கான் நிறுவனத்தின் ஆராய்ச்சி ஆய்வாளரான அனுஜ் செளவுத்ரி கூறுகையில், அமெரிக்க நாணயத்தின் வலுவான தேவைக்கு மத்தியில் ரூபாயின் இன்றைய மதிப்பு சரிந்த நிலையில், சீன யுவான் மதிப்பும் பலவீனமாக இருப்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலசாலூா், கௌரிப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

புகாரை வாபஸ் பெறக் கோரி திரைப்பட தயாரிப்பாளருக்கு மிரட்டல்

அம்மன் கோயில் தேருக்கு தீவைப்பு: மக்கள் மறியல்

ஆசிரியா் நாள் விழா: 12 ஆசிரியா்களுக்கு விருது

காரில் 359 கிலோ குட்கா கடத்தல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT