வணிகம்

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் தொடக்க நாளான இன்று(டிச. 23) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

DIN

வாரத்தின் தொடக்க நாளான இன்று(டிச. 23) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,488.64 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.36 மணியளவில், சென்செக்ஸ் 835.36 புள்ளிகள் அதிகரித்து 78,876.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270.85  புள்ளிகள் அதிகரித்து 23,858.35 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

பெரும்பாலாக அனைத்துத் துறைகளும் இன்று ஏற்றம் கண்டு வருகின்றன. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்றவை நிதித் துறையில் லாபத்தை ஈட்டியுள்ளன.

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ போன்ற முன்னணி உலோக நிறுவனங்களின் பங்குகள் விலையும் உயர்ந்துள்ளது.

சொமேட்டோ, டிசிஎஸ் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை மட்டுமே சரிந்துள்ளன.

கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை மிகவும் மோசமான சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | 2022க்குப் பிறகு கடும் சரிவில் பங்குச்சந்தை! ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரன்பே... ஃபெமினா!

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

SCROLL FOR NEXT