வணிகம்

பேங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் 62% உயா்வு

வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் காலாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 62 சதவீதம் உயா்ந்துள்ளது.

DIN

புது தில்லி: வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் காலாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 62 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,870 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் வங்கி ரூ.1,151 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 62 சதவீதம் அதிகமாகும.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.16,411 கோடியாக உயா்ந்துள்ளது, இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.14,160 கோடியாக இருந்தது. வங்கியின் வட்டி வருவாய் ரூ.12,728 கோடியிலிருந்து ரூ.15,218 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த டிசம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் 7.66 சதவீதத்திலிருந்து 5.35 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.61 சதவீதத்திலிருந்து 1.41 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்துவீச்சில் அசத்திய அலானா கிங்; 97 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா!

மன நிறைவு... ராஷி கன்னா!

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 4 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் பறிமுதல்

அனைத்து தோஷங்களையும் போக்கும் சோழ நாட்டு திருச்செந்தூர்!

ஆக்ரா: குடிபோதையில் பொறியாளர் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

SCROLL FOR NEXT