வணிகம்

கோல் இந்தியா லாபம் ரூ.9,069 கோடி

DIN

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.9,069.19 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.9,069.19 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 16.9 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.7,755.55 கோடியாக இருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த விற்பனை ரூ.32,429.46 கோடியிலிருந்து ரூ.33,011.11 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தை மறித்த யானைகள்! பதற்றமான நொடிகள்! | CBE

கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

எஸ்400 வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை!

யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்பு போராட்டம்

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.79,000-ஐ நெருங்குகிறது!

SCROLL FOR NEXT