சோனி ப்ளே ஸ்டேஷன்  
வணிகம்

900 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய சோனி: காரணம் என்ன?

சோனியின் பெரும் பணி நீக்கம்: விற்பனை குறைவு காரணமா

DIN

ஜப்பானை சேர்ந்த முன்னணி மின்சாதன தயாரிப்பு நிறுவனமான சோனி, அதன் ப்ளே ஸ்டேஷன் பிரிவில் பணியாற்றிய 900 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

லண்டனில் உள்ள அலுவலகத்தையும் மூட முடிவு செய்துள்ளது சோனி.

விடியோகேம் துறையே ஒட்டுமொத்தமாக தொடர் சரிவைச் சந்தித்துவரும் நிலையில் சோனியின் கேமிங் பொருள்கள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

இந்த பணி நீக்கம் அமெரிக்கா முதல் ஆசியா வரை உள்ள சோனியின் பிரிவுகளில் வேலை செய்வோரை உள்ளடக்கியது. ப்ளே ஸ்டேஷன் 5 சாதனத்தின் விற்பனை எதிர்பார்ப்பு கணக்கீடு குறைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடும் முடிவுகள் தவிர்க்க முடியாதவை எனத் தெரிவித்துள்ளார் சோனி நிறுவனத்தின் கேமிங் பிரிவின் தலைவர் ஜிம் ரியான்.

இந்தப் பணி நீக்கம், நிறுவனத்தின் வளர்ச்சி, பகிர்மானம் மற்றும் புதிய தயாரிப்பு அறிமுகம் உள்ளிட்டவற்றில் தாக்கத்தை ஏற்படத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியான் மார்ச்சில் பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT