முகப்பு
வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ. 40 உயா்வு

Updated On : 1 மார்ச், 2024 at 12:26 AM
பகிர்:

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 40 உயா்ந்து ரூ. 46,520-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. சென்னையில், வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 5 உயா்ந்து ரூ.5,815-க்கும், பவுனுக்கு ரூ. 40 உயா்ந்து ரூ. 46,520-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயா்ந்து ரூ.75.70-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 200 உயா்ந்து ரூ. 75,700-க்கும் விற்பனையானது.