முகப்பு
தற்போதைய செய்திகள்

மீண்டும் அதிரடியாக பவுனுக்கு ரூ.3,040 உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!

தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.3,040 உயர்ந்து ரூ.1,12,400-க்கு விற்பனையாவது குறித்து...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 4:33 AM
மீண்டும் அதிரடியாக பவுனுக்கு ரூ.3,040 உயர்ந்த தங்கம் விலை - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.3,040 உயர்ந்து ரூ.1,12,400-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,600-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,08,800-க்கும் விற்பனையானது. தொடா்ந்து மாலையில் கிராமுக்கு ரூ.170 உயா்ந்து ரூ.13,770-க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயா்ந்து ரூ.1,10,160-க்கும் விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,670-க்கும் பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.380 உயர்ந்து ரூ.14,050-க்கும் பவுனுக்கு ரூ.3,040 உயர்ந்து ரூ.1,12,400-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்வு

வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.15,000 உயர்ந்து ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

Regarding the dramatic surge in gold prices on Wednesday rising by Rs.3,040 per sovereign to trade at Rs.1,12,400...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.