கோப்புப்படம் 
வணிகம்

இரண்டாவது நாளாக கரடி ஆதிக்கம்: 536 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

பங்குச்சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும்  கரடி ஆதிக்கம் செலுத்தியது.  இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 536  புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.

 நமது நிருபர்

பங்குச்சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும்  கரடி ஆதிக்கம் செலுத்தியது.  இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 536  புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள், ரியால்ட்டி, ஃபார்மா, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. ஆனால்,  ஐடி,  நிதி நிறுவனங்கள், மெட்டல் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன.  இதைத் தொடர்ந்து பங்குச்சந்தை 2-ஆவது நாளாக தொடர்ந்து சரிவில் முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. 
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு  ரூ.9 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.365.09 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை ரூ.1,602.16 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். அதே சமயம்,  உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,959.04 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தொடர் சரிவு:
காலையில் 59.86 புள்ளிகள் குறைந்து  71,832.62-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 71,862.00 வரை மேலே சென்றது. பின்னர், 71,303.97 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 535.88 புள்ளிகளை (0.75 சதவீதம்)  இழந்து 71,356.60-இல்  நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,945  பங்குகளில் 2,194 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,643 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 108 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
20 பங்குகள் விலை வீழ்ச்சி:
சென்செக்ஸ் பட்டியலில் இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்பட 10 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா,  டிசிஎஸ் உள்பட   20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 148 புள்ளிகள் 
இழப்பு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 4.70  புள்ளிகள் குறைந்து 21,661.10-இல் தொடங்கிஅதிகபட்சமாக 21,677.00  வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர்,  21,500.35 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 148.45 புள்ளிகளை (0.65 சதவீதம்) இழந்து 21,517.35-இல் நிறைவடைந்தது.  நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 32 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT