வணிகம்

வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள்!

DIN

அமெரிக்காவில் மனிதர்களைப் போன்று சமையலறையில் நின்று வீட்டு வேலை செய்வதற்கு தானியங்கி இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக் கழகமும் கூகுள் டீப்மைன்ட் நிறுவனமும் இணைந்து வீட்டு வேலை செய்வதற்கான இயந்திரத்தை வடிவமைத்துள்ளன.

செய்யறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த இயந்திரங்களுக்கு 50 வகையான மனிதர்களின் நடவடிக்கைகள் சமையலறையில் பணி செய்வதற்கான உள்ளீடாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ரிமோட் மூலமும் கட்டுப்படுத்தலாம். 

உணவுகளை சமைப்பது, பாத்திரங்களை கழுவி சீர்படுத்துவது, பொருள்களை அடுக்குவது உள்ளிட்ட பல்வேறு சமையலறை பணிகளை இவை மேற்கொள்கின்றன.     

இந்த இயந்திரங்கள் பகுதியளவு மனிதர்களின் கட்டளைகளை உள்ளீடாகக் கொண்டு செயல்படுபவை. இதனால், இயந்திரங்களைக் கையாள்வதற்காக பயிற்சி பெற்றிருப்பது அவசியம். இந்த இயந்திரத்தின் செயல்திறனுக்கான ஆராய்ச்சியில் பெர்கேலே பல்கலைக் கழகமும், மெட்டா நிறுவனமும் பங்கெடுத்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'எலெக்சன்’ வெற்றியா? - திரைவிமர்சனம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

பந்துவீச்சாளர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

SCROLL FOR NEXT