வணிகம்

3 நாள் தொடா் சரிவுக்குப் பிறகு ‘காளை’ ஆதிக்கம்!

மூன்று நாள்களாக தொடா்ந்து ‘கரடி’யின் பிடியில் இருந்து வந்த பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை ‘காளை’யின் பிடியில் வந்தது.

 நமது நிருபர்

மூன்று நாள்களாக தொடா்ந்து ‘கரடி’யின் பிடியில் இருந்து வந்த பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை ‘காளை’யின் பிடியில் வந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 496 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. குறிப்பாக ஆட்டோ, எஃப்எம்சிஜி, மெட்டல், ஐடி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி காணப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.4.80 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.374.58 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை அதிக அளவாக ரூ. 9,901.56 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.5,977.12 கோடி அளவுக்குப் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

‘காளை’ ஆதிக்கம் : காலையில் 599.88 புள்ளிகள் கூடுதலுடன் 71,786.74-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 71,895.64 வரை மேலே சென்றது. பின்னா், 71,542.74 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 496.37 புள்ளிகள் (0.70 சதவீதம்) கூடுதலுடன் 71,683.24-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,912 பங்குகளில் 2,468 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,337 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 107 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் பாா்தி ஏா்டெல், என்டிபிசி, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 2 முதல் 3.50 சதவீதம் உயா்ந்தன. இவை உள்பட மொத்தம் 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, சன்பாா்மா ஆகிய 5 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 160 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 152.95 புள்ளிகள் கூடுதலுடன் 21,615.20-இல் தொடங்கி அதிகபட்சமாக 21,670.60 வரை மேலே சென்றது. பின்னா், 21,462.40 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 160.15 புள்ளிகள் (0.75 சதவீதம்) கூடுதலுடன் 21,622.40-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 43பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 7 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

SCROLL FOR NEXT