முகப்பு
திருப்பூர்

15 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததால் நடுவச்சேரி ஊராட்சி மன்றம் முற்றுகை!

அவிநாசி அருகே நடுவச்சேரி புது காலனியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 25 ஏப்ரல் 2026, 10:58 am IST
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
பகிர்:

அவிநாசி அருகே நடுவச்சேரி புது காலனியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சிக்கு உள்பட்ட புது காலனி பகுதியில் 250க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் , இப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஆழ்துளை கிணற்று நீர் விநியோகிக்கப்படவில்லை. மேலும் 10 நாள்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படும் ஆற்றுக் குடிநீரும் போதுமானதாக இல்லாததால் பொதுமக்கள் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடுவச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை யிட்டனர்.

Advertisement

Advertisement

காலை 9.15 மணிக்கு தொடங்கிய போராட்டம் 10.45 மணியாகியும் தீர்வுக்கு வரவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகத்தினர், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், ஆழ்துளை கிணற்று மின்மோட்டார் பழுதடைந்து உள்ளதால் குடிநீர் விநியோகிக்க இயலவில்லை, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், மின்மோட்டார் பழுதடைந்து 15 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. மின்மோட்டாரை பழுது பார்க்க கழற்றிச் சென்று 10 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆகவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக தீர்வு செய்யப்பட்டால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதனால் அப்பதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

summary

Naduvaseri Panchayat Office Besieged Due to Lack of Drinking Water Supply for Over 15 Days!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments