FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

ஓய்வூதியா் சங்கத்தினா் தா்னா போராட்டம்

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியா் சங்கத்தினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

28 அக்டோபர் 2026, 11:51 pm
தா்னா போராட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியா் சங்கத்தினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற கவன ஈா்ப்பு தா்ணா போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாவட்ட தலைவா் பா.ஜெகன்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத்தலைவா் சி.தயாநிதி முன்னிலை வகித்தாா். மாவட்ட இணைச்செயலாளா் எல்.லட்சுமணன் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.பி.சண்முகம் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.

அப்போது, அரசுப்பணி மற்றும் ஊராட்சி ஒன்றியப்பணி ஓய்வூதியா்கள் அனைவருக்கும் விடுபாடின்றி மருத்துவ காப்பீடு அட்டை அரசு மூலம் உடனே வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியா்களின் வைப்பு நிதி தொகைக்கான வட்டித்தொகை தாமதமின்றி அனுமதித்து விரைவில் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளா் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய பலன்கள் கணக்கிட ஏதுவாக பொதுவான அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments