தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.53,520.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து ரூ. 53,000-க்கு விற்கப்பட்ட நிலையில், மீண்டும் உயர்ந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை சவரன் ரூ.53,480-க்கு விற்பனையானது.
மூன்று நாள்களாக தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 6,690-க்கும், ஒரு சவரன் ரூ.53,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 80 பைசா உயர்ந்து ரூ. 95.50-க்கும், ஒரு கிலோ ரூ. 95,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.