தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.54,280.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து வியாழக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ரூ.54,000-க்கு மேல் விற்பனையாகி வருகின்றது. நேற்று, ஒரு சவரன் தங்கம் ரூ, 54,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.54,280-க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராமின் விலை ரூ.6,785.
இந்நிலையில், வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.
நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளியின் விலை ரூ. 100-ஐ எட்டியதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.