பங்குச்சந்தை - கோப்புப் படம் 
வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

காலாண்டு முடிவுகளுக்கு முன், லாபப் பதிவில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவில் முடிந்தன.

DIN

மும்பை: நிறுவனங்களின் முதலாம் காலாண்டுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, முதலீட்டாளர்கள் அதிக லாபம் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 245.32 புள்ளிகள் உயர்ந்து 80,170.09 புள்ளிகளை தொட்டது. பிறகு சென்செக்ஸ் 460.39 புள்ளிகள் சரிந்து 79,464.38 புள்ளிகளைத் தொட்ட நிலையில் மீண்டும் 79,897.34 புள்ளிகளுடன் முடிவடைந்தது.

சென்செக்ஸ் 0.03 சதவிகிதம் குறைந்து 79,897.34 என்ற நிலையிலும் நிஃப்டி 24,315.95 புள்ளிகளுடன் முடிந்தது. இதில் 1,958 பங்குகள் ஏற்றத்திலும், 1,438 பங்குகள் சரிந்தும், 83 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.50 புள்ளிகள் குறைந்து 24,315.95 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக 24,402.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 24,193.75 புள்ளிகள் வரையிலும் வர்த்தகமானது.

சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, சன் பார்மா, நெஸ்லே, என்டிபிசி, பவர் கிரிட், என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை சரிந்து முடிந்தது. அதே வேளையில் ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது.

துறை சார்ந்த குறியீடுகளில், ரியால்டி பங்குகள் ஒரு சதவீதத்திற்கும் மேலாக குறைந்தது வர்த்தகமானது. இது மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் மற்றும் பிரிகேட் எண்டர்பிரைசஸ் ஆகிய பங்குகளில் எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து ஹெல்த்கேர் மற்றும் பார்மா குறியீடும் தலா ஒரு சதவிகிதம் சரிந்தது. வங்கிப் பங்குகள் தொடக்க இழப்புகளிலிருந்து மீண்டு 0.2 சதவிகிதம் உயர்ந்த முடிந்த நிலையிலும், எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த பங்குகளான ஐ.டி.சி மற்றும் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் பங்குகள் உயர்ந்து முடிந்தது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் தனது முதல் காலாண்டு முடிவுகள் இன்று வெளியிட உள்ள நிலையில், ஐடி பங்குகள் இன்று முதலிட்டார்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்தும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி சாதகமாக வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (புதன்கிழமையன்று) கணிசமாக உயர்ந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (புதன்கிழமை) ரூ.583.96 கோடி பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.21 உயர்ந்து பீப்பாய்க்கு 85.26 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT