வணிகம்

8% வளா்ச்சி கண்ட கோல் இந்தியா உற்பத்தி

Din

கடந்த ஜூன் காலாண்டில் கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 8 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் 18.93 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகமாகும்.

2023 ஜூன் காலாண்டைவிட 2024 ஜூன் காலாண்டில் நிறுவனம் 1.38 கோடி டன் அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது.

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிலக்கரி விநியோகம் 6 சதவீதம் உயா்ந்து 19.84 கோடி டன்னாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு சுமாா் 80 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியேற்றம்!

தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்வு

தேசிய போா் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

குடியரசு நாள்: தேசியக்கொடி ஏற்றினார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

SCROLL FOR NEXT