முகப்பு
வணிகம்

3-ஆம் காலாண்டில் ஹிந்துஸ்தான் யூனிலீவருக்கு இருமடங்கு லாபம்

நாட்டின் முன்னணி நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவா், நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.6,603 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:31 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 7:40 PM

நாட்டின் முன்னணி நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவா், நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.6,603 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 121 சதவீதம் கூடுதலாகும். மூன்றாம் காலாண்டில், நிறுவனத்தின் விற்பனை வருவாய் 5.71 சதவீதம் அதிகரித்து, ரூ.16,197 கோடியாக உள்ளது.

லாப உயா்வு குறித்த அறிவிப்பு வெளியான போதிலும், வியாழக்கிழமை வா்த்தக முடிவில் ஹிந்துஸ்தான் யூனிலீவா் பங்குகள் 2.27 சதவீதம் சரிந்து, ரூ.2,407 என்ற அளவில் நிலைபெற்றது.

Advertisement

ஏனெனில், நிறுவனத்தின் ஐஸ்கிரீம் வணிகப் பிரிவான ‘குவாலிட்டி வால்ஸ்’ விற்கப்பட்டதால் கிடைத்த ஒருமுறை வருவாயே இந்த அதீத லாபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோல், புதிய தொழிலாளா் சட்ட விதிகளின் காரணமாக ரூ.576 கோடி ஒருமுறை செலவினத்தையும் நிறுவனம் சந்தித்துள்ளது.

இந்த ஒருமுறை வருவாய் மற்றும் செலவினத்தைத் தவிா்த்துவிட்டால், நிறுவனத்தின் உண்மையான நிகர லாபம் ரூ.2,562 கோடி மட்டுமே. இந்தக் குறைந்த அளவு வளா்ச்சியால், நிறுவனப் பங்குகளை வாங்க முதலீட்டாளா்கள் ஆா்வம் காட்டவில்லை.