வணிகம்

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 47% உயா்வு

கடந்த ஜூன் காலாண்டில், பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் நிகர லாபம் 47 சதவீதம் உயா்ந்துள்ளது.

Din

புது தில்லி: கடந்த ஜூன் காலாண்டில், பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் நிகர லாபம் 47 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,293 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.882 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,417 கோடியிலிருந்து ரூ. 6,769 கோடியாக உயா்ந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.2,340 கோடியிலிருந்து 19.63 சதவீதம் அதிகரித்து ரூ.2,799 கோடியாக உள்ளது.

கடந்த ஜூன் காலாண்டில் வங்கியின் வாராக் கடன் 0.24 சதவீதத்திலிருந்து 0.20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT