வணிகம்

விப்ரோ வருவாய் ரூ.21,964 கோடியாகச் சரிவு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.21,963.8 கோடியாகச் சரிந்துள்ளது.

Din

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.21,963.8 கோடியாகச் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,003.2 கோடியாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 4.6 சதவீதம் அதிகம்.

இருந்தாலும், மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 3.8 சதவீதம் சரிந்து ரூ.21,963.8 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தம் நகரில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

குருகிராம்: சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஆற்காடு நகரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், 2 பசுமை பூங்காக்கள்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT