வணிகம்

அசோக் லேலண்ட் வா்த்தக வாகன விற்பனை புதிய உச்சம்

இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் கடந்த ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

Din

இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் கடந்த ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூனுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவன வா்த்தக வாகனங்களின் எணிக்கை 43,893-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிகபட்ச முதல் காலாண்டு விற்பனையாகும்.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் 41,329 வா்த்தக வாகனங்ளை விற்பனை செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்தக் காலாண்டில் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 30.7 சதவீதமாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT