முகப்பு
வணிகம்

கணிசமான உயர்வு: சரிவிலிருந்து மீண்ட அதானி குழும பங்குகள்!

அதானி குழும பங்குகள் உயர்வு; அதானி கிரீன் 11.01 சதவிகிதம் உயர்வு

Updated On : 5 ஜூன், 2024 at 1:20 PM
கௌதம் அதானி
பகிர்:

அதானி குழுமத்தின் நிறுவன பங்குகள் புதன்கிழமை பலமான விசையுடன் மீண்டுள்ளன. செவ்வாய்க்கிழமை சரிந்த பங்குச்சந்தை புதன்கிழமை இயல்புக்கு திரும்பியதையடுத்து அதானி எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் தலைமையில் மற்ற அதானி குழும பங்குகளும் கணிசமான உயர்வை சந்தித்துள்ளன.

பட்டியிலிடப்பட்ட 10 அதானி நிறுவன பங்குகளில் 9 பங்குகள் ஆதாயத்தில் முடிவடைந்தன. அதானி கிரீன் எனர்ஜி 11.01 சதவிகிதமும் அதானி போர்ட்ஸ் 8.59 சதவிகிதமும் உயர்வை சந்தித்தன.

அம்புஜா சிமிண்ட் 7.47 சதவிகிதமும் அதானி எண்டர்பிரைசஸ் 6.02 சதவிகிதமும் உயர்வை சந்தித்தன. ஏசிசி 5.20 சதவிகிதமும் என்டிடிவி 3.26 சதவிகிதமும் அதானி டோட்டல் கேஸ் 2.67 சதவிகிதமும் விலை உயர்ந்தன.

அதானி வில்மர் 0.77 சதவிகிதமும் அதானி பவர் 0.32 சதவிகிதமும் உயர்வை சந்தித்தன.

அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் 15 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக நிலைபெற்றது.

தேர்தல் முடிவுகள் நிச்சயமின்மையால் பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை சரிவை சந்தித்த நிலையில் புதன்கிழமை பங்குச் சந்தை குறியீடுகள் ஏறுமுகத்தில் முடிவந்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →