டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களின் விலை, ஜூலை 1-ம் தேதி முதல் 2 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக புதன்கிழமை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் கடந்த மார்ச்சில் ஏற்கெனவே 2 சதவிகிதம் வணிக வாகனங்களின் விலையை உயர்த்திய டாடா தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வணிக வாகனங்கள் அனைத்துக்கும் இந்த விலையேற்றம் பொருந்தும் எனவும் ஆனால் ஒவ்வொரு மாதிரி மற்றும் வகைக்கு ஏற்றாற்போல மாறும் எனவும் டாடா தெரிவித்துள்ளது.
வருவாய் அடிப்படையில் நாட்டின் முதன்மையான வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம், கார்கள், யூவிக்கள், பிக்-அப்புகள், டிரக்குகள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.