மும்பை: அரசியல் பதட்டங்கள் காரணமாக அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைகளுக்கு மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 17 பைசா சரிந்து ரூ.83.61 ஆக நிலைபெற்றது.
அந்நிய செலாவணி வர்த்தகர்களின் கூற்றுப்படி, வெளிநாட்டு மூலதனத்தின் வருகை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் நேர்மறையான வேகம் ஆகியவை உள்ளூர் பிரிவை ஆதரிக்கத் தவறிவிட்டது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இன்று ரூ.83.43 ஆக தொடங்கிய வர்த்தகம், இன்றயை இன்ட்ரா-டேவில் ரூ.83.42 என்ற உச்சத்தை தொட்டது.
இன்றைய வர்த்தக முடிவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.68 ரூபாயாக குறைந்தது. இறுதியாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.83.61 ஆக நிலைபெற்றது. இது முந்தைய முடிவில் இருந்து 17 காசுகள் சரிவை பதிவு செய்தது.
புதன்கிழமையன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து 83.44 ரூபாயாக இருந்தது. முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதியன்று டாலருக்கு எதிரான உள்நாட்டு நாணயம் ரூ.83.61 ஆக முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.