மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்றம் மற்றும் நிலையான உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் ஆகியவற்றால் இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 11 பைசா உயர்ந்து ரூ.83.46 ஆக நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், ரூ.83.52 ஆக வர்த்தகமான நிலையில் அது இன்றைய இன்ட்ராடே உயர்வான ரூ.83.44 எட்டியது. இறுதியாக டாலருக்கு எதிராக ரூ.83.46 ஆக நிலைபெற்றது. இது முந்தைய முடிவில் இருந்து 11 பைசா லாபத்தைப் பதிவு செய்தது.
அதே வேலையில் வெள்ளிக்கிழமையன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.63 ஆக இருந்தது, ஆனால் இறுதியாக இது ரூ.83.57 ஆக முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.