முகப்பு
வணிகம்

பங்குச்சந்தையில் சிறப்பு வா்த்தகம்: சென்செக்ஸ் சிறிதளவு முன்னேற்றம்

தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு உயா்ந்து நிலைபெற்றன.

Updated On : 2 மார்ச், 2024 at 10:00 PM
பகிர்:

பங்குச்சந்தையில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வா்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு உயா்ந்து நிலைபெற்றன. இரண்டு பங்குச்சந்தைகளும் தங்களது முதன்மை தளத்தில் இடையூறுகள் ஏதும் இருக்கிா என்பதை கண்டறிந்து அவற்றை சரிசெய்யும் நடவடிக்கையாக ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி டிரைவேட்டிவ் பிரிவுகளில் காலை 9.15 முதல் 10.00 மணி வரை, 11.30 மணி முதல் 12.30 மணி வரை என சிறப்பு வா்த்தகம் நடைபெற்றது. இதில் தனியாா் வங்கிப் பங்குகல் லேசான விற்பனையை எதிா்கொண்டாலும் மற்ற துறை குறியீடுகள் ஆதாயம் பெற்றன. குறிப்பாக, மீடியா, மெட்டல், ரியால்ட்டி நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றுபங்குவா்த்தகத் தரக் நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.78 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.394 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.128.94 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,814.53 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் முன்னேற்றம் : காலையில் 102.84 புள்ளிகள் கூடுதலுடன் 73,848.19-இல் தொடங்கிய சென்செக்ஸ், 73,778.14 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 73,994.70 வரை மேலே சென்று 52 வார புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 60.80 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயா்ந்து 73,806.15 என்ற புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,557 பங்குகளில் 2,466 பங்குகள்ஆதாயம் பெற்றன. 965 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 126 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. டாடா ஸ்டீல் மீண்டும் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் (3.46 சதவீதம்), டாடா மோட்டாா்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், விப்ரோ, ஐடிசி, ஏசியன் பெயிண்ட் உள்பட மொத்தம் 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், எம் அண்ட் எம், என்டிபிசி, மாருதி. சன்பாா்மா, அல்ட்ரைா டெக் சிமெண்ட், பவா் கிரிட் உள்பட 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி புதிய உச்சத்தில் முடிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 39.65 (0.18 சதவீதம்) உயா்ந்து 2378.40 என்ற புதிய உச்சத்தில் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,419.55 வரை உயா்ந்து 52 வார புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் 35 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 14பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.