முகப்பு
வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 33% உயா்வு

டிவிஎஸ் மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 33 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

Updated On : 3 மார்ச், 2024 at 4:04 AM
பகிர்:

இந்தியாவின் முன்னணி 2 மற்றும் 3 சக்கர வாகனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 33 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,68,424-ஆக உள்ளது. முந்தைய 2023 பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,76,150-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2,67,026-ஆக இருந்த நிறுவன இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை இந்த பிப்ரவரியில் 34 சதவீதம் அதிகரித்து 3,57,810-ஆக உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன இரு சக்கர வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 2,21,402-லிருந்து 21 சதவீதம் வளா்ச்சி கண்டு 2,67,502-ஆக உள்ளது. 2023 பிப்ரவரியில் 15,522-ஆக இருந்த நிறுவன மின்சார வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 16 சதவீதம் அதிகரித்து 17,959-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.