கோப்புப் படம் 
வணிகம்

வீட்டிலிருந்து பணி செய்தால் பதவி உயர்வு கிடையாது!

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு பதவி உயர்வோ அல்லது பணி மாறுதலோ வழங்கப்படாது என டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு பதவி உயர்வோ அல்லது பணி மாறுதலோ வழங்கப்படாது என டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது டெல் நிறுவனம். கணினி, மடிக்கணினி மற்றும் மின்னணு உதிரி சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் பணிபுரியும் உழியர்கள் அலுவலகத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல் நிறுவனம் தனது ஊழியர்களை ஹைப்ரிட் - ரிமோட் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது.

இதில் ஹைப்ரிட் பிரிவைச் சேர்ந்தவர்கள் வாரத்தில் 3 நாள்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அலுவலகத்துக்கு வர வேண்டும். ரிமோட் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பல கட்டுப்படுகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

புதிய சிந்தனைகளௌ உருவாக்குவதற்காகவும், ஒருங்கிணைந்த மற்றும் மேபட்ட பணிச்சூழலை ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய டெல் நிறுவனம் அறிவுறுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT