நாராயணமூர்த்தி - சுதா மூர்த்தி கோப்புப் படம்
வணிகம்

4 மாத பேரனுக்கு ரூ. 240 கோடி மதிப்புள்ள பங்குகள்! இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

இந்தியாவின் மிகக் குறைந்த வயதுடைய செல்வந்தனாக தனது பேரனை மாற்றுவதற்காக...

DIN

பிறந்து 4 மாதங்களே ஆன பேரனுக்காக ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை இந்திய தொழிலதிபரும் இன்ஃபோசிஸ் துணை நிறுவனருமான நாராயணமூர்த்தி எழுதிவைத்துள்ளார்.

இந்தியாவின் மிகக் குறைந்த வயதுடைய செல்வந்தனாக தனது பேரனை மாற்றுவதற்காக இதனை நாராயணமூர்த்தி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக இன்ஃபோசிஸுக்கு சொந்தமான 15 லட்சம் பங்குகளை தனது பேரனுக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார். இது அவருடைய மொத்த பங்குகளில் 0.04 சதவிகிதமாகும்.

நாராயண மூர்த்தியின் பேரனின் பெயர் ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி. நாராயணமூர்த்தியின் மகனான ரோஹன் மூர்த்தி - அபர்னா கிருஷ்ணனுக்கு மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்து 4 மாதங்களே ஆகின்றன.

நாராயணமூர்த்திக்கு ஏற்கெனவே கிருஷ்ணன் என்ற பேரனும், அனோஷ்கா என்ற இரு பேத்தியும் உள்ளனர். இவர்கள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் - அக்‌ஷதா மூர்த்திக்கு பிறந்தவர்கள்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 1.05 சதவிகித பங்குகள் அக்‌ஷதா மூர்த்திக்கு டிசம்பர் காலாண்டில் வழங்கப்பட்டது. இன்ஃபோசிஸில் சுதா மூர்த்திக்கு 0.93 சதவிகிதமும், ரோஹனுக்கு 1.64 சதவிகித பங்குகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT