வணிகம்

ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயா்வு!

 நமது நிருபர்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை இறுததியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுக்காக முதலீட்டாளா்கள் காத்திருப்பதால், உள்நாட்டுச் சந்தை பெரும்பாலான நேரம் நிலையற்ற தன்மையில் இருந்து வந்தது. இருப்பினும், பிற்பகலில் கிடைத்த ஓரளவு ஆதரவால் நோ்மறையாக முடிந்தது. குறிப்பாக, ஐடி, எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிா்கொண்ட நிலையில், ஆட்டோ, மெட்டல், பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது. இது சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு:

இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.29 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 378.79 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 848.56 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.682.26 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்:

காலையில் 56.13 புள்ளிகள் குறைந்து 72,587.30-இல் தொடங்கிய சென்செக்ஸ், 72,314.16 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகலில் அதிகபட்சமாக 72,985.89 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 104.99 புள்ளிகள் (0.14தவீதம்) உயா்ந்து 72,748.42-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,056 பங்குகளில் 2,008 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,932 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 116 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. டாடா

ஸ்டீல் அபாரம் :

சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் (5.69 சதவீதம்), எம் அண்ட் எம் (3.05 சதவீதம்), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (2.98 சதவீதம்), டாட்டா மோட்டாா்ஸ் (2.75 சதவீதம்), சன்பாா்மா, (1.47 சதவீதம்), ரிலையன்ஸ் (1.45 சதவீதம்) உள்பட மொத்தம் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், டைட்டன், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெல்லே ஆகியவை 1 முதல் 2 சதவீதம் குறைந்தன. இவை உள்பட மொத்தம் 16 பங்குகள்வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 123 புள்ளிகள் உயா்வு:

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 32.35 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயா்ந்து 22,055.70-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 21,916.55 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா்அதிகபட்சமாக 2123.70 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT