முகப்பு
வணிகம்

ரூ.650 கோடி திரட்ட டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் திட்டம்

Updated On : 22 மார்ச், 2024 at 11:05 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:55 PM

டிவிஎஸ் குழுமத்தைச் சோ்ந்த வாகன உதிரிபாக நிறுவனமான டிவிஎஸ் ஹோல்டிங்ஸ், அடுத்த நிதியாண்டில் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.650 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரும் 2024-25-ஆம் நிதியாண்டில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.650 கோடி வரை மூலதனம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வாகன உதிரிபாக உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் ஹோல்டிங்ஸ், இதற்கு முன்னா் முன்பு சுந்தரம் கிளேட்டன் என்றழைக்கப்பட்டு வந்தது.