முகப்பு
இந்தியா

அடுத்த நிதியாண்டில் ரூ.8.20 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

அடுத்த நிதியாண்டின் (2026-27) ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8.20 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 27 மார்ச் 2026, 11:34 pm IST
மத்திய அரசு
பகிர்:

அடுத்த நிதியாண்டின் (2026-27) ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8.20 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

2026-27 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட அரசு ரூ.17.20 லட்சம் கோடி கடன் பெற வேண்டி இருக்கும் என கடந்த பிப்.1-ஆம் தேதி பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதில் ரூ.11.7 லட்சம் கோடி நீண்ட கால கடன் பத்திரங்கள் மூலம் பெறப்படும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.

Advertisement

இந்நிலையில், மத்திய அரசு மேற்கொண்ட கடன் மேலாண்மை நடவடிக்கைகளைத் தொடா்ந்து 2026-27 நிதியாண்டில் பெற வேண்டிய கடன் தொகை ரூ.16.09 லட்சம் கோடியாக குறைந்தது.

இதுதொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2026-27 நிதியாண்டில் மத்திய அரசு ரூ.16.09 லட்சம் கோடி கடன் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் பசுமைத் திட்ட கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ.15,000 கோடி உள்பட நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8.20 லட்சம் கோடி (51 சதவீதம்) ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் திரட்டப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

2026-27 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறை 4.3 சதவீதமாக இருக்கும் என பட்ஜெட்டில் கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.