வணிகம்

டிவிஎஸ் அப்பாச்சியின் புதிய மாடல் பைக் அறிமுகம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி புதிய பிளாக் எடிசன் வெளியீடு!

DIN

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் புதிய பிளாக் எடிசன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

160சிசி-யில் கிடைக்கும் இந்த இரு மாடல்களிலும் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. அதன் பாடி பேனல்கள் எளிமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. எரிபொருள் டேங்கில் பொறிக்கப்பட்ட கருப்பு டிவிஎஸ் லோகோவைத் தவிர்த்து, பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பின் பகுதியில் முறையே அபாச்சி மற்றும் ஆர்டிஆர் 160 4வி லோகோ அமையபெற்றது. அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி பிளாக் எடிஷன் பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் வாய்ஸ் அசிஸ்ட் மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டு உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி பைக்கில் இருக்கும் 160சிசி எஞ்சின் அதிகபட்சமாக 15.82 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். அதே வேளையில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 160சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ரைடிங் மோட்களைப் பெறுகின்றன. அவை வெவ்வேறு ரைடிங் சூழல்களுக்கு ஏற்ப எஞ்சின் மற்றும் ஏபிஎஸ் மாற்றியமைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

SCROLL FOR NEXT