முகப்பு
வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு

Updated On : 21 மே, 2024 at 9:11 PM
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880-க்கு விற்பனையானது.

திங்கள்கிழமை தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.55,200-க்கு விற்பனையானது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,860-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 குறைந்து ரூ.99,000-க்கும் விற்பனையானது.