ரிசர்வ் வங்கி ENS
வணிகம்

நடப்பு நிதியாண்டில் 7% ஜிடிபி வளர்ச்சி: ரிசர்வ் வங்கி கணிப்பு

2024-25 ஆண்டில் 7% ஜிடிபி வளர்ச்சி: ரிசர்வ் வங்கி கணிப்பு

DIN

நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அளவீடு ஜிடிபி 7 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.0 சதவிகிதமாக சமச்சீரான அபாயங்களுடன் இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருப்பதாகவும் நுண்பொருளியலின் அலகுகள், வலுவான நிதி மற்றும் கார்ப்பரேட் துறைகள் பலத்தில் பொருளாதாரம் செயல்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

2023-24 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி அதற்கு முந்தைய ஆண்டின் 7 சதவிகித உயர்விலிருந்து 7.6 சதவிகிதமாக அதிகரித்தது எனக் குறிப்பிட்டுள்ள ஆர்பிஐ வளர்ச்சி முகமாக மூன்றாவது ஆண்டும் 7 சதவிகிதம் உயரும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அரசின் மூலதன செலவுக்கான உந்துதல் மற்றும் நுகர்வோர், வணிக நிறுவனங்களின் நேர்மறையான போக்கு ஆகியவை மூலதனம் மற்றும் நுகர்வு தேவை அதிகரிப்புக்கு சாதகமாக இருப்பதாக ஆர்பிஐ தெரிவிக்கிறது.

மேலும் பணவீக்கம் 2023-24 ஆண்டு சராசரியில் இருந்து 1.3 சதவிகிதமளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் சிதைந்துவிட்டது: ஜெய்ஷ் தளபதி ஒப்புதல்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ஏப்.1 முதல் ஆக.31 வரை பணியில் சோ்ந்த மத்திய அரசுப் பணியாளா்கள்: யுபிஎஸ்ஸுக்கு மாற ஒருமுறை வாய்ப்பு

திருப்பத்தூரில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்

SCROLL FOR NEXT