எச்டிஎஃப்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் வங்கி சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் பராமரிப்பு பணிகளுக்கு திட்டமிடப்பட்டிருப்பதால், இந்த மாதத்தில் இரண்டு நாள்கள் வங்கியின் யுபிஐ உள்ளிட்ட சேவைகளில் சிறிது நேரம் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ சேவை முடங்கும் நாள், நேரம்
இன்று நள்ளிரவு 12 மணியிலிருந்து 2 மணிவரை(2 மணிநேரம்),
நவம்பர் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணியிலிருந்து 3 மணி வரை(3 மணிநேரம்)
எந்தந்த சேவைகள் பாதிக்கப்படும்
எச்டிஎஃப்சி வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள், அதேபோல் ரூபே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான யுபிஐ பரிவர்த்தனை இயங்காது.
மேலும், எச்டிஎஃப்சி வங்கி கணக்கு லிங்க் செய்யப்பட்டுள்ளஜிபே, வாட்ஸ்அப் பே, பேடிஎம், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மொபிக்விக் மற்றும் கிரெடிட்.பே ஆகியவையும் குறிப்பிட்ட நாள்களில் இயங்காது.
இதனிடையே, இந்த பராமரிப்புப் பணியின் போது, எச்டிஎஃப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.