கோப்புப் படம் 
வணிகம்

தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் லாபம் உயர்வு!

தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், 2024 செப்டம்பருடன் முடிவடைந்த 2வது காலாண்டில், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.2.83 கோடி என்று தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், 2024 செப்டம்பருடன் முடிவடைந்த 2வது காலாண்டில், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.2.83 கோடி என்று தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.15.79 கோடியாக பதிவு செய்திருந்தது.

நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2023 டிசம்பரில் சென்னையில் கரையைக் கடந்த மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக ஆலை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த காலாண்டில் ரூ.1.62 கோடி செலவிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : ரூ.12 கோடி நஷ்டத்தை பதிவு செய்த ஆன்மொபைல் குளோபல்!

பொருளாதார சவால்களுக்கு இடையிலும், தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த நிலையில் மதிப்பீட்டு காலாண்டில் வருவாய் ரூ.441.35 கோடியிலிருந்து ரூ.455.66 கோடியானது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், நீண்டகால வாடிக்கையாளர் உறவுகளை வளர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். செயல்பாட்டு திறன் மற்றும் செலவு மேலாண்மை ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துவது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும் என்றார் நிறுவனத்தின் துணைத் தலைவரான அஸ்வின் முத்தையா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT