புதுதில்லி: டாடா குழுமத்தின் வங்கி அல்லாத நிதி நிறுவனமான டாடா கேபிடல், 3வது காலாண்டில், வரிக்குப் பிந்தைய லாபம், கடந்த ஆண்டை விட 39% அதிகரித்து ரூ.1,285 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.
கடந்த நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.922 கோடி பதிவானதாக நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் நிகர மொத்த வருமானம் 33% அதிகரித்து ரூ.3,594 கோடியாக உள்ளது என்றது. இதுவே கடந்த ஆண்டு ரூ.2,711 கோடி இருந்ததாக டாடா கேபிடல் தெரிவித்துள்ளது.
3வது காலாண்டில் நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 26% அதிகரித்து ரூ.2,936 கோடியாக இருப்பதாகவும், கடந்த வருடம் இது ரூ.2,323 கோடியாக இருந்ததாக தெரிவித்தது.
நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் நிகர மதிப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1,86,404 கோடியிலிருந்து 26% அதிகரித்து ரூ.2,34,114 கோடியாக உள்ளது.
மோட்டார் துறையைத் தவிர்த்து, நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 26% அதிகரித்து ரூ.2,34,114 கோடியாக இருப்பதாகவும், வரிக்குப் பிந்தைய லாபம் ஆண்டுக்கு ஆண்டு 39% அதிகரித்து ரூ.1,285 கோடியாக இருப்பதாக டாடா கேபிட்டலின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜீவ் தெரிவித்தார்.
அக்டோபர் 2025ல் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டதிலிருந்து டாடா கேபிடல் அறிவிக்கும் 2வது காலாண்டு நிதிநிலை முடிவுகள் இதுவே ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.