டாடா ஸ்டீல் 3வது காலாண்டு நிகர லாபம் அதிகரிப்பு!
டாடா ஸ்டீல் அதன் ஒருங்கிணைந்த லாபம் பல மடங்கு அதிகரித்து ரூ. 2,730.37 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
புதுதில்லி: டிசம்பர் உடன் முடிவடைந்த 3வது காலாண்டில், டாடா ஸ்டீல், அதன் ஒருங்கிணைந்த லாபம் பல மடங்கு அதிகரித்து ரூ. 2,730.37 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் குறைந்த செலவிலான எஃகு உற்பத்திக்கு நிறுவனம் மாறிக்கொண்டிருக்கும் நிலையைத் தவிர, மற்ற அனைத்து செயல்பாடுகளிலும் வருவாய் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்றது நிறுவனம்.
கடந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனம் ரூ. 295.49 கோடி லாபம் ஈட்டியிருந்தது. அதே வேளையில், நிதியாண்டின் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த ரூ. 53,869.33 கோடியிலிருந்து ரூ. 57,503.49 கோடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
வருவாய் பெறுத்த வரையில், டாடா ஸ்டீல் இந்தியா மற்றும் நீலாச்சல் இஸ்பத் நிகம் ஆகியவை ரூ. 37,141.51 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது நிதியாண்டின் 3வது காலாண்டில் ஈட்டிய ரூ. 34,218.73 கோடியை விட அதிகம்.
Tata Steel on Friday said its consolidated profit jumped manifold to Rs 2,730.37 crore in the December quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.