அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!
2027 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 17.23 சதவீதம் அதிகரித்து ரூ. 2,603.72 கோடியாக உள்ளது.
நாட்டின் முன்னணி சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் 2027 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 17.23 சதவீதம் அதிகரித்து ரூ. 2,603.72 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 2,220.91 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்ததாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் முதன்மை நிறுவனம் தெரிவித்தது.
2027 நிதியாண்டின் ஜூன் காலாண்டில், செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் 15.85 சதவீதம் அதிகரித்து ரூ. 24,648.20 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ. 21,275.45 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் ரூ. 21,286.19 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டை விட இது 15.65 சதவீதம் அதிகமாகும்.
2027 நிதியாண்டின் ஜூன் காலாண்டில், பிற வருவாயையும் உள்ளடக்கிய அல்ட்ராடெக் சிமெண்டின் மொத்த வருவாய் 15.48 சதவீதம் அதிகரித்து ரூ. 24,778.47 கோடியாக உள்ளது.
ஜூன் காலாண்டில், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்நாட்டு விற்பனை 39.2 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 13.1 சதவீத வளர்ச்சியாகும். நிறுவனத்தின் மொத்த ஒருங்கிணைந்த சிமெண்ட் விற்பனை அளவு 12.2 சதவீதம் அதிகரித்து, ஆண்டுக்கு 41.31 மில்லியன் டன்னாக உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், இன்றைய வர்த்தகத்தில், அல்ட்ராடெக் நிறுவனத்தின் பங்கின் விலை, முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 1.47 சதவீதம் உயர்ந்து ரூ. 11,897.80 ஆக இருந்தது.
UltraTech Cement on Monday reported a 17.23 per cent increase in its consolidated net profit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.