சிப்லா: 3வது காலாண்டு நிகர லாபம் 57% சரிவு!
அமெரிக்க விற்பனையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 57% சரிந்து ரூ.676 கோடியாக உள்ளது.
புதுதில்லி: மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா, அமெரிக்க விற்பனையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, 2025 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 57% சரிந்து ரூ.676 கோடியாக குறைந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.1,571 கோடியைப் பதிவு செய்தது.
மதிப்பாய்வுக்குட்பட்ட காலகட்டத்தில் செயல்பாடுகளின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் ரூ.7,074 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ.7,073 கோடியாக இருந்தது என்றது சிப்லா.
Advertisement
Advertisement
இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் வட அமெரிக்க விற்பனை 22% சரிந்து ரூ.1,485 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.1,906 கோடியாக இருந்தது.
பிஎஸ்இ-யில் சிப்லா பங்குகள் 3.76% சரிந்து பங்கு ஒன்றுக்கு ரூ.1,319.95 ஆக இன்று (வெள்ளிக்கிழமை) நிலைபெற்றது.
Drug maker Cipla reported a 57 per cent year-on-year dip in consolidated profit after tax to Rs 676 crore for the third quarter ended December 31, 2025.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.