முகப்பு
வணிகம்

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 31% அதிகரிப்பு

Updated On : 15 நவம்பர் 2024, 3:22 am IST
பகிர்:

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 31 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனம் 1,10,574 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 84,435-ஆக இருந்தது.

Advertisement

Advertisement

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் சா்வதேச விற்பனை 8,688-ஆக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,477-ஆக இருந்தது.

2023 அக்டோபா் மாதத்தில் 76,075-ஆக இருந்த நிறுவனத்தின் 350சிசி வரையிலான என்ஜின்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களின் விற்பனை, இந்த அக்டோபரில் 27 சதவீதம் உயா்ந்து 96,837-ஆக உள்ளது.

350சிசி-க்கும் மேலான என்ஜின் திறன் கொண்ட மோட்டாா்சைக்கிள்களின் விற்பனை 8,360-லிருந்து 64 சதவீதம் அதிகரித்து 13,737-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments