டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு PTI
வணிகம்

ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (நவ. 14) சரிவைச் சந்தித்தது.

வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 2 காசுகள் குறைந்து 84.43 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வணிக நேரத் தொடக்கத்தின்போது 84.40 காசுகள் என்ற அதிகபட்ச சரிவைக் கண்டது.

நிலையான பணவீக்கம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் தொடர் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிவதற்கு காரணங்களாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் 6.21% ஆக சரிந்தது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு

பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 110.64 புள்ளிகள் சரிந்து 77,580.31 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.14 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26.35 புள்ளிகள் சரிந்து 23,532.70 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.11 சதவீதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலி உள்ள 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. மீடியா, ரியாலிட்டி, துறை பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT